பிரதமர் அலுவலகம்
உஜ்வாலா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
22 SEP 2025 3:46PM by PIB Chennai
உஜ்வாலா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம், இந்தப் புனிதமான பண்டிகை காலத்தில் மக்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பதுடன், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அரசின் உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும்" என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது;
"நவராத்திரி பண்டிகையின் புனித நாளில் உஜ்வாலா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! மத்திய அரசின் இந்தத் திட்டம் புனித பண்டிகை காலங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்தும்."
-----------
AD/SV/KPG
(रिलीज़ आईडी: 2169881)
आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam