நிதி அமைச்சகம்
அரசுப் பத்திரங்களின் ஏல விற்பனைக்கான அறிவிப்பு (மறு வெளியீடு)
प्रविष्टि तिथि:
22 SEP 2025 6:06PM by PIB Chennai
(i) ‘6.68% GS 2040’ மற்றும் (ii) ‘6.90% GS 2065’ விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு)
மத்திய அரசு (i) “6.68% வட்டி விகிதத்துடன் கூடிய அரசு கடன் பாத்திரங்கள் 2040” -ஐ 16,000 கோடி ரூபாய் (பெயரளவு மதிப்பு) என்று அறிவிக்கப்பட்ட தொகைக்கு பன்முக விலை முறையைப் பயன்படுத்தி விலை அடிப்படையிலான ஏல நடைமுறைகளின் மூலம் விற்பனை செய்வதற்கான (மறு வெளியீடு) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
(ii) “6.90% வட்டி விகிதத்துடன் கூடிய அரசு கடன் பாத்திரங்கள் 2065” -ஐ 16,000 கோடி ரூபாய் (பெயரளவு) என்று அறிவிக்கப்பட்ட தொகைக்கு பன்முக விலை முறையைப் பயன்படுத்தி விலை அடிப்படையிலான ஏல நடைமுறையின் மூலம் விற்பனை செய்வதற்கான (மறு வெளியீடு) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு கடன் பத்திரத்திற்கும் 2,000 கோடி ரூபாய் வரை கூடுதல் சந்தாவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விருப்பத் தேர்வை மத்திய அரசு கொண்டிருக்கும். ஏல விற்பனை 2025 செப்டம்பர் 26 (வெள்ளிக்கிழமை) அன்று மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக வளாகத்தில் நடைபெறும்.
அரசு கடன் பத்திரங்களின் ஏலத்தில் போட்டியற்ற ஏல வசதிக்கான திட்டத்தின்படி, பத்திரங்களின் விற்பனையில் அறிவிக்கப்பட்ட தொகையில் 5% வரை தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏலத்திற்கான போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் போட்டியற்ற ஏல விற்பனை ஆகிய இரண்டு வகையான ஏலத்தில் பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை 2025 செப்டம்பர் 26 அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டியற்ற ஏல விற்பனைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் காலை 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டித்தன்மையற்ற ஏலங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஏல விற்பனைக்கான முடிவுகள் 2025 செப்டம்பர் 26 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும்.
----
AD/SV/KPG
(रिलीज़ आईडी: 2169885)
आगंतुक पटल : 27