பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்துவது அரசின் நோக்கம் – பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
30 SEP 2025 1:08PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூரில் முப்படைகளும் ஒருங்கிணைந்த நிகழ்நேர செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி சுப்ரதோ பூங்காவில் 2025 செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற இந்திய விமானப்படையின் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இது உரியநேரத்தில் தளபதிகள் முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் அளித்தது என்றும் சூழ்நிலை சார்ந்த விழிப்புணர்வை மேம்படுத்தி அபாயத்தைக் குறைத்ததாகவும் கூறினார். இந்திய ராணுவத்தின் ஆகாஷ்தீர் மற்றும் இந்திய கடற்படையின் டிரைகன் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார். முப்படைகளிடையே கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்துவதை தங்கள் அரசு நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இது கொள்கை விஷயமாக மட்டுமின்றி விரைவாக மாறி வரும் பாதுகாப்பு சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆய்வு மற்றும் தணிக்கைகள், விமானப் போக்குவரத்து தரநிலைகள் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பு ஆகியவற்றில் பகிரப்படும் கற்றல் மூலம் சிறந்த கூட்டாண்மையை வளர்த்தல் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கருத்தரங்கு, நவீன போர் முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் ஆயுதப் படைகள், ஆழ்ந்த ஒருங்கிணைப்பை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173013
***
SS/IR/AG/SH
(Release ID: 2173263)
Visitor Counter : 10