சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2035-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கை அடையவதற்கான வழிகாட்டி நெறிமுறை: புதுச்சேரிப் பல்கலைக்கழகம் வெளியீடு
Posted On:
07 OCT 2025 5:04PM by PIB Chennai

நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கை வரும் 2035-ம் ஆண்டிற்குள் எட்டுவதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. எரிசக்தி மற்றும் தண்ணீருக்கான நீடித்த சுற்றுச்சூழல் 2025 என்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. பசுமை எரிசக்தி தொழில்நுட்பத் துறை (புதுச்சேரிப் பல்கலைக்கழகம், இந்தியா) மற்றும் சிவில் பொறியியல் துறை (மொரட்டுவா பல்கலைக்கழகம், இலங்கை) ஆகியவை இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த வழிகாட்டுதல் நெறிமுறை குறித்த அறிக்கையை புதுச்சேரிப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மதஞ்சீத் சிங் அறக்கட்டளையின் பிரான்ஸ் மார்கெட், ஆரோவில் ஆலோசனை குழு உறுப்பினர் திரு டொயின் வான் மேகன், பசுமை எரிசக்திக்கான யுனெஸ்கோ இருக்கையின் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத், தெற்காசிய நீர்வள மேலாண்மைக்கான இருக்கையின் டீன் பேராசிரியர் பி. எம். ஜாஃபர் அலி மற்றும் பேராசிரியர் லலித் ராஜபக்சே ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில், 2014 முதல் 2024 வரை 3 விதங்களில் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021 முதல் ஆண்டு தோறும் 3.5 மில்லியன் யூனிட்கள் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய எரிசக்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 2035-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த அறிக்கை, அப்பல்கலைக்கழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா மற்றும் தெற்காசியாவில் உள்ள இதர கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக அமையும். இதில் வெளிப்படைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க ஏரிசக்தி, உற்பத்தி திறன், போக்குவரத்து, கொள்முதல் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கை அடைவதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முன்னோடி முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
***
SS/SV/AG/KR
(Release ID: 2175881)
Visitor Counter : 6