சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ், தரவு மைய செயல்பாடுகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள்

Posted On: 08 OCT 2025 12:47PM by PIB Chennai

சமூகப் பொறுப்பு நிதி தொடர்பான முன்முயற்சி நடவடிக்கையாக , தரவு மைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புத்  துறையில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 35 மணி நேர ஆன்லைன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 160 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் 5 நாட்கள் இந்தப் பயிற்சி வழங்கப்படும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் சர்வதேச நிறுவனமான வெர்டிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தயார்நிலையை உருவாக்கும் வகையில் அத்துறையில் திறன்மிக்க நபர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

டிஜிட்டல் துறையில் திறன் மிக்க நபர்களை உருவாக்குவதற்கான சமூகப் பொறுப்புணர்வுடன் உத்திசார் கூட்டாண்மையாக இந்தப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படுவதாக அக்டோபர் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த தரவு மைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து 35 மணி நேர ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் 160 மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 5 நாட்கள் இதற்கான பயிற்சி வழங்கப்படும்.

இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப  அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் நேரடிப் பயிற்சியுடன் கூடிய திறன் மேம்பாட்டிற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176168

***

SS/SV/KPG/KR


(Release ID: 2176241) Visitor Counter : 11
Read this release in: English