சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய பிரிவு, கேட்ஸ் நிறுவனம் இணைந்து தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாட்டை நடத்தவுள்ளது

Posted On: 21 OCT 2025 4:42PM by PIB Chennai

ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய பிரிவு, கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு 2025-ஐ ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் 2025 நவம்பர் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடத்தவுள்ளது. தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களுடன் 250-க்கும் மேற்பட்ட தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர்கள், இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

ஐஐடி மெட்ராஸின்  ஆராய்ச்சி பூங்கா மற்றும் தொழில்காப்பக பிரிவின் ஆதரவுடன் ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய பிரிவு இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

2025 நவம்பர் 6 அன்று புதுமை கண்டுபிடிப்புகளிலிருந்து உலகளாவிய தாக்கம் வரை என்ற தலைப்பில் முக்கிய அமர்வு நடைபெறவுள்ளது. இதல்  இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்பு பொருளாதாரத்தில் 3 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

ஐஐடி மெட்ராஸ், ரெடிங்டன் குழுமம், சோஹோ நிறுவனம் ஆகியவை இதில் கலந்து கொள்கின்றன. இதில் ஐஐடி மெட்ராஸில்  மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பெரிய அளவிலான தொழில்நுட்பங்களாக மாற்றம் கண்டுள்ளன. ரெடிங்டன் குழுமம் 40 உலகளாவிய சந்தைகளில் புதுமை கண்டுபிடிப்புகளை அணுகுவதற்கு முக்கிய தளமாக திகழ்கிறது. சோஹோ நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்திய மண்ணிலிருந்தே கட்டமைக்க முடியும் என்று நிரூபித்துவருகிறது.

சேவை வழங்குவோர் என்ற நிலையிலிருந்து தீர்வு வழிகாட்டியாக இந்தியா மாறுவதற்கான வழிவகைகள் குறித்து இம்மாநாட்டில் உரையாடல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181136

***

SS/IR/KPG/SG

 


(Release ID: 2181266) Visitor Counter : 8