பிரதமர் அலுவலகம்
லச்சித் தினத்தையொட்டி லச்சித் போர்புகானுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
24 NOV 2025 11:31AM by PIB Chennai
லச்சித் தினத்தையொட்டி லச்சித் போர்புகானை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, துணிச்சல், தேசபக்தி மற்றும் சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.
லச்சித் போர்புகானின் வீரம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அசாமின் முன்மாதிரியான கலாச்சாரத்தை பாதுகாப்பதிலும், ஒற்றுமை மற்றும் மீள்தன்மையின் மாண்புகளை உறுதி செய்வதிலும் லச்சித் போர்புகானின் முக்கிய பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது;
“லச்சித் தினத்தன்று துணிச்சல், தேசபக்தி மற்றும் சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழும் லச்சித் போர்புகானை நாம் நினைவுகூர்கிறோம். அவருடைய வீரம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அசாமின் முன்மாதிரியான கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.”
***
(Releasae ID 2193392)
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2193539)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam