திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 5:25PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின்  கீழ், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்  நாடு முழுவதும் உள்ள  அனைத்துப் பிரிவினருக்கும் திறன், மறுதிறன் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது என்று மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை அவர் தெரிவித்தார்.  இளைஞர்களுக்கான பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம், சமூகத் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம்  மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள்  மூலமான கைவினைஞர் பயிற்சித் திட்டம்  போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டு மையங்களின் விரிவான வலைப்பின்னல் மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இளைஞர்களுக்கான பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்  கீழ், குறுகிய கால திறன் பயிற்சி, முந்தைய கற்றலை அங்கீகரித்தல் மற்றும் தொழில்துறை சார்ந்த முறைப்படுத்தப்பட்ட திறன் திட்டங்கள் ஆகியவை மின்னணு துறை திறன் கவுன்சில் மற்றும் முன்னணி தொழில்துறையினர் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகின்றன என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்துறையின் தேவைகள், பணியாளர்களின் தேவைகள் ஆகியவற்றுடன் இணக்கத்தை உறுதிசெய்ய, இதற்கான  பாடங்கள் தொழில்துறையினரின் கருத்துக்களைப் பெற்று காலமுறைப்படி புதுப்பிக்கப்படுகின்றன.

இந்தப் பாடங்கள் தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு அடிப்படையில் அமைந்துள்ளன. தேசியத் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில்  மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன. மேலும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்  கீழ் உள்ள தலைமைப் பயிற்சி இயக்குநர்,  நாடு முழுவதும் உள்ள தொழில்துறையின் திறன்வாய்ந்த மனிதவளத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், இணக்கமான 169 வர்த்தகங்களை தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. இதில் 'மின்னணு மற்றும் ஹார்டுவேர்' துறையில் மட்டும் 9 பாடத்திட்டங்கள் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சி, கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள், தேசிய திறன் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197059&reg=3&lang=1

***

AD/VK/RK


(रिलीज़ आईडी: 2197477) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी