உள்துறை அமைச்சகம்
வெற்றி தினத்தையொட்டி, போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 10:29AM by PIB Chennai
போரில் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வெற்றி தினத்தையொட்டி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், 1971-ம் ஆண்டு இதே நாளில் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய இணையற்ற துணிச்சலுடன் துல்லியமான உத்தியுடன் பாகிஸ்தான் ராணுவத்தினரை தோற்கடித்து சரணடையச் செய்தனர் என்று கூறியுள்ளார். இந்த வெற்றி அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி மனித நேயத்தைப் பாதுகாப்பதில் ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்தியது என்றும் இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும், திறனையும் வெளிப்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID 2204408)
AD/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2204800)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam