சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன- மத்திய அமைச்சர் திருமதி அனுபிரியா படேல்

प्रविष्टि तिथि: 16 DEC 2025 3:03PM by PIB Chennai

தேசிய மருத்துவ ஆணையம் அளித்த தகவலின்படி, நாட்டில் 2020-21-ம் கல்வி ஆண்டு முதல் 2025-26-ம் கல்வி ஆண்டு வரை  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு  48,563 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 29,080 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  அத்துடன் 2025-26-ம் நிதியாண்டு முதல் 2028-29-ம் நிதியாண்டு வரை அரசுக் கல்லூரிகளில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், கூடுதலாக 10,023 மருத்துவ  இடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 7,619 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுபிரியா படேல் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204570&reg=3&lang=1

 

***

AD/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2204894) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu