பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 12:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ராம் சுதார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராம் சுதார் ஒரு அற்புதமான சிற்பி என்றும், அவரது கைவண்ணம், கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும் என்றும், அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
"கெவாடியாவில் உள்ள ஒற்றுமைச் சிலை உட்பட, இந்தியாவின் மிகவும் பிரபலமான சில அடையாளச் சின்னங்களை நமக்கு வழங்கிய, ஒரு அற்புதமான சிற்பியான ராம் சுதாரின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். அவரது படைப்புகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கூட்டு உணர்வின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளாக எப்போதும் போற்றப்படும். அவர் வரும் தலைமுறையினருக்காக தேசியப் பெருமையை அழியாததாக்கியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி."
***
Release ID: 2205735
SS/PKV /AE
(रिलीज़ आईडी: 2205853)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam