உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎம்எஃப்எம்இ திட்டத்தால் எதிர்கொள்ளப்படும் சவால்கள்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:07PM by PIB Chennai

பிரதமரின்  குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும்  திட்டம்நாட்டில் உள்ள குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, 2020 ஜூன் மாதத்தில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் உள்ளன. இவை பொதுவாக கடன் பெறுவது சிரமம். தொழில்நுட்ப மேம்பாடுசந்தைப்படுத்தல் இணைப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பற்றாக்குறையால் இந்த நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கூறுகள்குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கான மாதிரி விரிவான திட்ட அறிக்கைகள்தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனங்களுடன்  கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டுஅனைவரும் எளிதாக அணுகுவதற்காக திட்ட இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான மத்திய இணை அமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205782&reg=3&lang=1

 

***

SS/PKV/SE


(रिलीज़ आईडी: 2206182) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी