தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு ஆச்சார்யா தொழில்நுட்ப கழகத்தில் நவீன முறையிலான (ஜென் இசட்) அஞ்சல் அலுவலகம் திறப்பு

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:54PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள ஆச்சார்யா தொழில்நுட்ப கழகத்தின் அஸித் நகர் அஞ்சல் அலுவலகத்தில் மறுசீரமைக்கப்பட்ட கர்நாடகாவின் முதலாவது நவீன முறையிலான (ஜென் இசட்) அஞ்சல் அலுவலகத்தை இந்தியா போஸ்ட் திறந்துள்ளது. இளைஞர்களுக்கு உகந்த வகையில் தொழில்நுட்பம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சி மின்னணு அணுகல், வடிவமைப்பை உருவாக்கல், உரையாடல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இளைய தலைமுறையினருக்கான முன்னுரிமைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவீன பணியிடம், புத்தக அலமாரி, பெங்களூரு, இந்தியா போஸ்ட் மற்றும் ஆச்சார்யா கல்வி நிறுவனம் தொடர்பாக மாணவர்கள் வரைந்த ஓவியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இலவச வைஃபை அணுகல், வசதியான இருக்கை, லேப்டாப் மற்றும் மொபைல் போன்களுக்கான மின்னேற்றி வசதிகள், காஃபி தயாரிப்பு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205818&reg=3&lang=1

***

SS/IR/RK/SE


(रिलीज़ आईडी: 2206183) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu