உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘ஓமன்’ நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா பாராட்டு

प्रविष्टि तिथि: 18 DEC 2025 5:56PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘தி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்’ (The First Class of the Order of Oman) வழங்கப்பட்டதற்குமத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள திரு. அமித் ஷா, "பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஓமன் நாட்டின் இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பதுஅவரது சிறந்த ராஜதந்திரத்திற்கும்உலகளாவிய தலைவராக அவர் பெற்றுள்ள அங்கீகாரத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய சான்றாகும். பிரதமருக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் இத்தகைய சர்வதேச கவுரவங்கள், 140 கோடி இந்தியர்களின் வலிமையையும்அவரது தலைமையின் கீழ் இந்தியா அடைந்து வரும் மாற்றத்தையும் பறைசாற்றுகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206094&reg=3&lang=1

***

AD/VK/SE


(रिलीज़ आईडी: 2206306) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam