சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இன்ஃப்ளூயன்சா பாதிப்பை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:40PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், இன்ஃப்ளூயன்சா பாதிப்பை எதிர்கொள்வதற்கு அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்த இரண்டு நாள் சிந்தனை அமர்வை புதுதில்லியில் 2025, டிசம்பர் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது. நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்படும் பருவத்தில் அதை எதிர்கொள்வது மற்றும் தடுப்பதற்கான தயார் நிலையை வலுப்படுத்துவது குறித்து விளக்கங்களை அளிப்பது இந்த அமர்வின் நோக்கமாகும்.
இதற்கான தொடக்க அமர்வில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, இந்த சிந்தனை அமர்வு, இன்ஃப்ளூயன்சாவிற்கு எதிரான தயார்நிலையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து அனைத்து பங்குதாரர்களும் விவாதிப்பதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207460®=3&lang=1
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2207513)
आगंतुक पटल : 10