மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, 2025: இறுதி முடிவுகள் வெளியீடு

प्रविष्टि तिथि: 22 DEC 2025 6:06PM by PIB Chennai

ஜூலை 20, 2025 அன்று மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, 2025-ன் எழுத்துத் தேர்வு (பகுதி-I) மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர், 2025 வரை நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வு (பகுதி-II) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்காணும்  இரண்டு பிரிவுகளின் கீழ் சேவைகள்/பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட தேர்வர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்:

பிரிவு-I

மத்திய சுகாதார சேவையின் அரசுப் பணி மருத்துவ அதிகாரிகள் துணைப் பிரிவில் மருத்துவ அதிகாரிகள்.

பிரிவு-II

(அ) ரயில்வேயில் உதவிப் பிரிவு மருத்துவ அதிகாரி.

(ஆ) புதுதில்லி நகராட்சி கவுன்சிலில் பொதுப் பணி மருத்துவ அதிகாரி.

மற்றும்

(இ) தில்லி மாநகராட்சியில் இரண்டாம் நிலை பொதுப் பணி மருத்துவ அதிகாரி.

பிரிவு-இல் மொத்தம் 363 தேர்வர்களும்,  பிரிவு-II இல் மொத்தம் 449 பேரும் நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்திலும் அணுகலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207481&reg=3&lang=1

***

SS/BR/SE


(रिलीज़ आईडी: 2207563) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi