ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வேலைவாய்ப்பு உதவியாளர்களுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 6:42PM by PIB Chennai
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பு உதவியாளர்கள் போபாலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து, நிர்வாக செலவினங்களை 6 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தனர். வேலைவாய்ப்பு உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல் குறித்து கூறிய திரு சிவராஜ் சிங் சவுகான், இதை நிவர்த்தி செய்ய நிர்வாக செலவினங்களை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னர் 6 சதவீதமாக இருந்த நிர்வாகச் செலவு, இப்போது 9 சதவீதமாக, அதாவது, ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, என்று அமைச்சர் கூறினார். இதன் விளைவாக, முன்மொழியப்பட்ட மொத்த பட்ஜெட்டான ₹1,51,282 கோடியில், சுமார் ₹13,000 கோடி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகத் தேவைகளுக்காக ஒதுக்கப்படும். இந்தத் தொகை ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவுகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என்றும், நிர்வாகச் செலவினங்களில் எந்த விதமான வீண் விரயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
பழைய குறைபாடுகளை நீக்குவதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க திட்டத்தை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். நிர்வாக செலவினங்களை அதிகரிப்பதன் மூலம், அடிமட்டத்தில் பணிபுரியும் சக ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்க ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த கிராம பஞ்சாயத்து திட்டத்தின் கீழ், அனைத்துத் திட்டங்களும் கூட்டு ஆலோசனை மூலம் தயாரிக்கப்படுவதுடன், கிராமமே அதன் வளர்ச்சியின் போக்கை தீர்மானிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2207507®=3&lang=1
***
SS/BR/SE
(रिलीज़ आईडी: 2207582)
आगंतुक पटल : 5