சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளம் சமையல்கலை நிபுணர் போட்டியின் தென் மண்டலச் சுற்று சென்னையில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 23 DEC 2025 7:57PM by PIB Chennai

தென்னிந்தியா முழுவதும் உள்ள முன்னணி ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த திறமைவாய்ந்த சமையல்கலை  மாணவர்களை ஒன்றிணைத்துசென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலைத் துறையில்தேசிய இளம் சமையல்கலை நிபுணர் போட்டியின் (NYCC) தென் மண்டலச் சுற்றை பிஹெச்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) ஏற்பாடு செய்தது. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம்இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு (IFCA) மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் திறன் கவுன்சில் (THSC) ஆகியவற்றுடன் இணைந்து இந்த தென் மண்டல சுற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய சமையல் அகாடமிஓசூரில் உள்ள ஆசிய கிறிஸ்தவ சமையல் வேளாண் அறிவியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐஹெச்எம் ஆகிய மூன்று அணிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுஇறுதிப் போட்டியில் தெற்கு மண்டலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஹெச்எம் ஸ்ரீ சக்தி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

புகழ்பெற்ற பிரபல சமையல்கலை நிபுணர் திரு கே. தாமோதரன் (செஃப் தாமு)பங்கேற்பாளர்களுடன் உரையாடும்போதுஇந்திய உணவு வகைகள் கலாச்சாரம்நினைவாற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும்இளம் சமையல்கலை நிபுணர்கள் முதலில் அதை ஆத்மார்த்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

என்ஒய்சிசி-ன் இறுதிப் போட்டி 2026 ஜனவரி 19 அன்று புதுதில்லியில் உள்ள பூசா ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும். இதில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207890&reg=3&lang=1

***

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2207967) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी