Special Service and Features
azadi ka amrit mahotsav

திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழாவையொட்டி அஞ்சல் துறை சார்பில் இரண்டு சிறப்பு சேவை அரங்கங்கள் தொடக்கம்

प्रविष्टि तिथि: 04 JAN 2026 3:41PM by PIB Chennai

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179-வது தியாகராஜர் ஆராதனை விழா, ஸ்ரீ தியாகராஜர் ஆலய வளாகத்தில் 2026 ஜனவரி 03 முதல் ஜனவரி 07 வரை சிறப்பாக நடைபெறுகிறது.

 

இந்தப் பெருவிழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் பக்தர்களும் அஞ்சல் துறையின் சேவைகளை எளிதில் பெறுவதற்காக, அஞ்சல் துறை சார்பில் இரண்டு சிறப்பு சேவை அரங்கங்கள் (UTSAV Counter/ Aadhar counter) தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு அஞ்சல் சேவை அரங்கங்கள், ஆராதனைக்கு வருகை தரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி டி. நிர்மலா தேவி  03.01.2026 (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

1. அஞ்சல்தலை காட்சி சேவை அரங்கம் - இந்த அரங்கத்தில் அஞ்சல் தலை விற்பனை, நிரந்தர சித்திர முத்திரை (Permanent Pictorial Cancellation) இடுதல் உள்ளிட்ட பல்வேறு அரிய, சிறப்பு அஞ்சல் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

2. ஆதார் சேவை அரங்கம் - ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த மதிப்புமிக்க கலாச்சார நிகழ்வின் மத்தியில், ஆதார் சேர்க்கை, பயோமெட்ரிக் புதுப்பிப்பு, மொபைல் எண் திருத்தம், தனிப்பட்ட விவர திருத்தங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் எளிதாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியமான மக்கள் சேவைகளை மக்களுக்கருகே கொண்டு வருவதில் இந்திய அஞ்சல் துறையின் உறுதியான அர்ப்பணிப்பை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் இச்சிறப்பு சேவைகளை பயன்படுத்தி பயன் பெறுமாறு அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2211250) आगंतुक पटल : 411