பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் மோரன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவசர கால தரையிறங்கும் வசதி தொடங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 12 FEB 2026 11:03AM by PIB Chennai

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தின் மோரன் புறவழிச் சாலையில் அவசர கால தரையிறங்கும் வசதி 2026 பிப்ரவரி 14 அன்று தொடங்கப்படுகிறது. இது வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலாவது அவசர கால தரையிறங்கும் வசதி பிரிவாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி இதைத் தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவு இக்கட்டான சூழலின் போது போர் வீரர்கள் செல்வதற்கும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கும் மாற்று ஓடுபாதையாக செயல்படும். தொலைதூரப் பகுதிகளில் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போது இது முக்கிய பங்காற்றும்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226797&reg=3&lang=1

***

VL/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2227196) आगंतुक पटल : 96
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu , Kannada