குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 8:27AM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் 1998 பிப்ரவரி 14 அன்று நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’1998 பிப்ரவரி 14 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களை இந்நாளில் கனத்த மனதுடன் நினைவு கூர்ந்து எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். அது நம் தேசத்தின் வரலாற்றில் மறக்க முடியாத இருண்ட பக்கமாகும். அன்று, திரு. எல். கே. அத்வானி கோவைக்கு வந்திருந்த வேளையில் நிகழ்ந்த இந்தக் கொடூர குண்டு வெடிப்புகள், பல குடும்பங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தி, நம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது. அந்த நாளின் பயமும், பதற்றமும் நிறைந்த சூழ்நிலை இன்றும் என் நினைவில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது. அந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றில் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க போராடிய அந்தக் கொடிய நிமிடங்கள் என் வாழ்வின் துயரம் மிகுந்த காலங்கள்.
இந்நாளில் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவு கூர்ந்து, துயரத்தில் வாடும் குடுமிபங்களுடன் ஒருமித்த உணர்வில் நின்று, அவர்களது துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
இந்நாளில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்று. அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் உறுதி எடுத்துக் கொள்வோம்.’’
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227896®=3&lang=1
***
AD/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2231809)
வருகையாளர் எண்ணிக்கை : 7