ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச அணைப் பாதுகாப்பு மாநாடு பெங்களூரில் தொடங்கியது - அணைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 10:32AM by PIB Chennai

அணைப் பாதுகாப்பு, நீர் உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறையில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக சர்வதேச அணைப் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இது பெங்களூரில் நேற்று (2026 பிப்ரவரி 13) தொடங்கியது. 2026 பிப்ரவரி 14 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்தும் உலகம் முழுவதிலுமிருந்தும் நீர் வள வல்லுநர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வளர்ந்து வரும் சவால்கள், ஒழுங்குமுறை கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள்,  அணை பாதுகாப்புக்கான சிறந்த அணுகுமுறைகள் பற்றிய நுண்ணறிவுகள் இதில் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

அணைப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப நிலைத்தன்மையை மேம்படுத்துதல், நாடு முழுவதும் முக்கியமான நீர் மற்றும் உள்கட்டமைப்பு தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல முக்கியமான வழிகாட்டுதல்களும் டிஜிட்டல் தளங்களும் தொடக்க அமர்வில் வெளியிடப்பட்டன.

தொடக்க நாள் நிகழ்வுகளில், கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா, மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சௌத்ரி, கர்நாடக துணை முதலமைச்சர் திரு டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227911&reg=3&lang=1

***

(Release ID: 2227911)

AD/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2231823) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi