சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

2026-ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் பெறவுள்ள தமிழ்நாட்டின் ஆளுமைகளை ஆளுநர் திரு ஆர் என் ரவி கௌரவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 6:00PM by PIB Chennai

2026-ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் பெறவுள்ள தமிழ்நாட்டின் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி மக்கள் மாளிகையில் இன்று (23.02.2026) நடைபெற்றது. ஆளுநர் திரு ஆர் என் ரவி விருது பெறும் ஆளுமைகளைப் பாராட்டி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், 1950-ல் நமது நாடு குடியரசானது, 2000-ம் ஆண்டுக்கு முந்தைய நாட்டின் வரலாற்றுப் பெருமைகளையும், சிறப்புகளையும் மீண்டும் கற்றறிவதற்கு என்று குறிப்பிட்டார்.

பத்ம பூஷன் விருது பெற்ற எஸ் கே எம் மயிலானந்தன் (சமூக சேவை), கே ஆர் பழனிசாமி (மருத்துவம்), பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடி (அறிவியல் மற்றும் பொறியியல்), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி), ஹெச் வி ஹண்டே (மருத்துவம்), ரஞ்சனி மற்றும் காயத்திரி (கலை), பி நடேசன் (மருத்துவம்), திருவாரூர் பக்தவத்சலம் (கலை), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), கே ராமசாமி (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), ஆர் கிருஷ்ணன் – மறைவுக்குப் பின் (கலை) ஆகியோர் இந்த விழாவில் பாராட்டப்பட்டனர்.  

  

விழாவில் பேசிய பத்மபூஷன் விருது பெறும் கே ஆர் பழனிசாமி, 26 ஆண்டுகளாக யோகாப் பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், மூன்றாயிரத்திற்கும் அதிகமான பயிற்சி நிலையங்களைத் தொடங்கியிருப்பதாகவும் கூறினார். 13 ஆண்டுகளுக்கு முன் தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

டாக்டர் ஹெச். வி ஹண்டே பேசிய போது, மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, தொழு நோய்க்கான சிகிச்சை மையங்கள் தொடங்கியதால், இப்போது தொழு நோய் பாதிப்பு அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றார்.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் சென்னை ஐஐடி இயக்குநர் திரு வி காமகோடி பேசுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி கனவு காணும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்ம விருது பெறவிருக்கும்  மற்ற ஆளுமைகளும் இந்த விழாவில் தத்தமது துறையில் மேற்கொண்ட சிறப்புமிக்க முயற்சிகள் பற்றியும், அவற்றை அடைய பாடுபட்டது பற்றியும் எடுத்துரைத்தனர்.  

***

AD/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2231842) வருகையாளர் எண்ணிக்கை : 35