பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 4:59PM by PIB Chennai

வளர்ச்சியும் அமைதியும் ஒருங்கிணைந்தவை என்றும், அமைதி நிலவும்போது வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது என்றும், வளர்ச்சி மக்களை அடையும்போது அது அமைதியை வலுப்படுத்துகிறது என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் குவகாத்தியில் அசாம் மாநில அரசுடன் இணைந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதார்கள் நலத்துறை ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கிற்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள், மாநில நிர்வாக அதிகாரிகள், உயர் அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட வடகிழக்கு பிராந்தியம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளதாக கூறினார். குவகாத்தி - ஷில்லாங் இடையேயான ரயில், சாலைப் போக்குவரத்து மேம்பாடு, மாநிலங்களில் உள்ள ரயில்வே சேவைகள் விரிவாக்கம் ஆகியவை இதுவரை காணப்படாதது என்று அவர் தெரிவித்தார்.

பிராந்தியம் முழுவதும் புதிய விமான நிலையங்கள், புபேன் ஹசாரிகா பாலம் உள்ளிட்ட பெரிய பாலங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு சூழல்கள் ஆகியவை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பின் புதிய சகாப்தத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231786&reg=3&lang=1

AD/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2231853) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , Assamese , Bengali-TR , English , Urdu , हिन्दी