Special Service and Features
திருவாரூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வ. மோகனச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்
Posted On:
26 MAR 2026 4:14PM by PIB Chennai
2026 சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வழியாக தபால் நிலையம் வரை நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வ. மோகனச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பேரணிக்கு முன்னதாக, தமிழ்நாடு மத்திய பாலஷண்முகம் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்டனர். இவர்களுடன் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து, தேர்தல் விழிப்புணர்வு குறியீடு வடிவில் (Logo) வரிசையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்; இதனை ட்ரோன் மூலம் படம் பிடித்த காட்சிகள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து தொடங்கிய பேரணியில், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல", "100 சதவீதம் வாக்களிப்போம்" போன்ற கோஷங்களை எழுப்பியபடி, மாணவர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ரயில் நிலைய சந்திப்பில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய வீதிகள் மற்றும் மார்க்கெட் வழியாகச் சென்று தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணியின் இடை இடையே பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கலைவாணி, மகளிர் திட்ட இயக்குநர் திரு. பொன்னம்பலம், திருவாரூர் (168) சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. த. சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முனைவர் வெங்கடாசலபதி, பேராசிரியர் ரேணுகாதேவி, முனைவர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
***
TV/KR/SE
(Release ID: 2245679)
Visitor Counter : 83