பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 25 SEP 2025 6:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, பீகார் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில்  தலா ரூ. 10,000 வீதம், மொத்தம் ரூ. 7,500 கோடியை பிரதமர் நேரடியாகச் செலுத்துவார்.

பீகார் அரசின் இந்த முன்முயற்சி, பெண்களைத் தற்சார்பு அடையச் செய்வதையும், சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு நிதியுதவி அளித்து, அவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலை அல்லது வாழ்வாதார நடவடிக்கைகளைத் தொடங்க வழிவகுக்கும். இதன்மூலம் பொருளாதாரச் சுதந்திரமும் சமூக அதிகாரமளித்தலும் வளர்க்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ஆரம்ப மானியமாக ரூ.10,000 பெறுவார்கள். மேலும், அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியுதவி பெறும் வாய்ப்பும் உள்ளது. இந்த உதவியை, பயனாளி தனது விருப்பப்படி விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள், தையல், நெசவு மற்றும் பிற சிறுதொழில்கள் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

இந்தத் திட்டத்தில், நிதி உதவியுடன், சுய உதவிக் குழுக்களுடன் இணைந்த சமூக வள நபர்கள், பயிற்சியும் வழங்குவார்கள். அவர்களின் விளைபொருட்களின் விற்பனையை ஆதரிப்பதற்காக, மாநிலத்தில் கிராம கண்காட்சிகள்  மேம்படுத்தப்படும்.

முதலமைச்சரின்  மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் துவக்கம், மாநிலம் முழுவதும் மாவட்டம், வட்டாரம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராமம் எனப் பல்வேறு நிர்வாக நிலைகளில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171342&reg=3&lang=2

------ 

TV/BR/KR


(रिलीज़ आईडी: 2249748) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Bengali , Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam