வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாவ்யா திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை டிபிஐஐடி வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 23 MAY 2026 5:05PM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), பாவ்யா திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது முதலீட்டிற்குத் தயாராக, உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை பூங்காக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மைல்கல் மத்திய துறை திட்டமாகும்.

மேக் இன் இந்தியா, பிரதமரின் கதிசக்தி மற்றும் உலகளாவிய போட்டி உற்பத்தி இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான அரசின் பரந்த பார்வை ஆகியவற்றுடன் இணைந்த ஒருங்கிணைந்த தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி சூழலை வலுப்படுத்த பாவ்யா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2026-27 முதல் 2031-32 வரையிலான ஆறு ஆண்டுகளில் 100 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். முதல் கட்டத்தில், சவால் அடிப்படையிலான போட்டி தேர்வு செயல்முறை மூலம் 50 தொழில்துறை பூங்காக்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி அளவுகோல்கள், திட்டத் தேர்வு முறை, நிதி அமைப்பு, நிர்வாகக் கட்டமைப்பு, கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொழில்துறை பூங்காக்களுக்கான அமலாக்க முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கட்டமைப்பை வழிகாட்டுதல்கள் வகுக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264533&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2264596) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Malayalam