இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டு தினக் கொண்டாட்டம்: அகமதாபாத்தில் பிரமாண்ட சைக்கிள் பேரணி

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 1:41PM by PIB Chennai

'உடல் திறன் இந்தியா' இயக்கத்தின் 75-வது வாராந்திர சைக்கிள் ஓட்டும் நிகழ்வு, காமன்வெல்த் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000 இடங்களில் நடைபெற்றது. 2030-ல் அகமதாபாத்தில் நடக்கவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான விழிப்புணர்வாக இது அமைந்தது.

அகமதாபாத் சபர்மதி நதிக்கரையில் நடந்த முதன்மை நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதலமைச்சர் திரு. ஹர்ஷ் சங்கவி மற்றும் நடிகர் திரு. ஆயுஷ்மான் குரானா ஆகியோர் 5,000 சைக்கிள் ஓட்டுநர்களுடன் பங்கேற்றனர்.

இங்கு விளையாட்டு உள்கட்டமைப்பு கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை நோக்கி, இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இதில் ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264740&reg=3&lang=1

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264756) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada