சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எபோலா வைரஸ் பரவல்: உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசு அவசர எச்சரிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 8:24AM by PIB Chennai

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் 'பன்டிபூகியோவகை எபோலா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் இதனைச் சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையமும்  அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த எபோலா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. தற்போதைக்கு இதற்கு தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ கிடையாது. இந்தியாவில் இதுவரை இந்த நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, இந்தியக் குடிமக்கள் யாரும் காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் உள்ளூர் சுகாதார வழிகாட்டுதல்களைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264688&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264757) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Bengali , Odia , Telugu , Kannada , Malayalam