இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் உடற்தகுதியும் இளைஞர்களின் பங்களிப்பும் அவசியமானது: மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 2:26PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2030 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய 75-வது ஃபிட் இந்தியா ஞாயிறு மிதிவண்டிப் பேரணி ஐஐடி குவஹாத்தி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்‌ஷா கட்சே தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

சவாலான வானிலையையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், இளைஞர்களிடையே அமைச்சர் உரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை அப்போது அவர் எடுத்துரைத்தார். இந்திய விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உடற்தகுதியும் இளைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற ஜெயந்தா தாலுக்தார், சுஷிலா தேவி ஆகியோர் கலந்துகொண்டு இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்தனர். மேலும், வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய தங்-டா தற்காப்புக் கலை நிகழ்ச்சி, யோகா அமர்வுகள், காமன்வெல்த் விளையாட்டு கருப்பொருள் சார்ந்த சிறப்புப் பொருட்காட்சியும் இடம்பெற்றன. நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மிதிவண்டிப் பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264747&reg=3&lang=1   

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264777) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati