இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
குஜராத்தின் காந்திநகரில் ஒருங்கிணைந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAY 2026 3:30PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை இன்று திறந்து வைத்தார். நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ளன.
இம்மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி, உணவுவிடுதி, பல்நோக்கு பயிற்சி அரங்கம், தியான பூங்கா, அறிவியல் பூர்வமான பயிற்சிக்கு உதவும் நவீன உடற்தகுதி மேம்பாட்டு அரங்கம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் பெரிய இலக்குகளை நோக்கி பயணிக்கவும் நாட்டின் பெருமையை உயர்த்தவும் தகுந்த சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சியானது அறிவியல் ரீதியிலான பயிற்சியாலும் நவீன கட்டமைப்பு வசதிகளாலும் முன்னெடுத்துச்செல்லப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர், இந்தியாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டுகளுக்கான முதன்மை உயர் செயல்திறன் மையமாக காந்திநகரில் அமைந்துள்ள மையம் உருவெடுத்து வருவதாகப் பாராட்டினார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இந்த தங்கும் விடுதி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டுத்துறை வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264754®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264791)
வருகையாளர் எண்ணிக்கை : 13