மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிபிஎஸ்இ தேர்வு விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறையை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகளின் உதவியை பெற நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 6:00PM by PIB Chennai

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொண்டு வரும் தொழில்நுட்ப மற்றும் பணப்பரிவர்த்தனை சார்ந்த சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காண்பது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய நான்கு முக்கியப் பொதுத்துறை வங்கிகள், சிபிஎஸ்இ அமைப்பின் பணப்பரிவர்த்தனை நுழைவாயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தேர்வுக்கு பிந்தைய சேவை இணையதளத்துடன் அதனை ஒருங்கிணைக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள், முறையான கட்டணச் செலுத்தும் நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலம், சரியான நேரத்தில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் கூடுதல் கட்டணங்களை தானியங்கி முறையில் திருப்பிச் செலுத்தவும் வழிவகை செய்யும்.

சிபிஎஸ்இ தனது ஒட்டுமொத்த பணப்பரிவர்த்தனை முறையையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். நிதி அமைச்சகம் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்விதத் தடையுமின்றி பாதுகாப்பாக நடைபெறுவதோடு, மறுமதிப்பீட்டுச் சேவைகளைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு இது உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264797&reg=3&lang=1   

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264834) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi