பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எத்தனால் கலப்பு எரிபொருள் திட்டம் குறித்த தவறான தகவல்கள் - அரசு விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUN 2026 7:57PM by PIB Chennai
எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த, பழைய காணொளிகள் மற்றும் தவறான செய்திகள் பகிரப்படுகின்றன.
இந்தத் திட்டம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்றும், அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. E20 எரிபொருள் பயன்பாட்டால் வாகன என்ஜின் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தப் புகாரும் இல்லை. எத்தனால் தயாரிப்பு முறைக்கும், கரும்புச் சாற்றை நேரடியாக பெட்ரோலில் கலப்பதாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எத்தனால் முறையான தொழிற்சாலை செயல்முறைகள் மற்றும் கடுமையான தரக்கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகிறது.
எத்தனால் கலப்புத் திட்டத்தால் இந்தியா இதுவரை ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277210®=3&lang=1
செய்தி அடையான எண்:2277210
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2277288)
வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam