சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மிசோரமின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இந்தியாவின் 21-வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUL 2026 10:46AM by PIB Chennai
பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002 பிரிவு 39-ன் கீழ், ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையப் பரிந்துரையின் அடிப்படையிலும், அந்த முன்மொழிவை முறையாகப் பரிசீலித்த பின்னரும், 2026 ஜூன் 19 அன்று இந்த நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்தியாவின் 21-வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாகிறது. இது நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பு, அறிவியல் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002-ன் கீழ் பெறப்பட்ட, சரிபார்க்கப்பட்ட உயிரியல் மாதிரிகளைப் பாதுகாப்பதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியங்கள் இந்தியாவின் உயிரியல் பன்முகத்தன்மை ஆளுகைக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.
நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகமான மிசோரம் பல்கலைக்கழக ஆதரவின் கீழ் 2022-ல் நிறுவப்பட்ட இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இந்தோ-பர்மா பல்லுயிர் பெருக்கப் பகுதிக்குள் அமைந்துள்ளதாலும், அதன் சிறப்பு வாய்ந்த வகைப்பாடு நிபுணத்துவத்தாலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மிசோரமிலும் பரந்துபட்ட வடகிழக்குப் பிராந்தியத்திலும் 7,500-க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்களும், 2,000-க்கும் அதிகமான விலங்கினங்களும் உள்ளன.
உயிரியல் மாதிரிகளை அவற்றின் மூலத்திற்கு அருகிலேயே பாதுகாப்பதை சாத்தியமாக்குவது, அறிவியல் ஆவணப்படுத்தலை மேம்படுத்துவது, போக்குவரத்து சவால்களைக் குறைப்பது, மிசோரம் மாநில பல்லுயிர் பெருக்க வாரியம், பிராந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பை எளிதாக்குவது ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் தேசிய அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியங்களின் வலையமைப்பை இந்த அங்கீகாரம் மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281879®=3&lang=1
***
SS/SMB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2282091)
வருகையாளர் எண்ணிக்கை : 85