பாதுகாப்பு அமைச்சகம்
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர் சக்தியைக் கொண்டாடும் சுதந்திர தின விழா
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 5:48PM by PIB Chennai
நாட்டின் 80-வது சுதந்திரத் தின விழா 2026 ஆகஸ்ட் 15 அன்று புதுதில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டிற்கு உரையாற்றவுள்ள நிலையில், இக்கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலை வகிக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் முகப்பிலிருந்து தேசியப் பாடல் பாடப்படவுள்ளது.
2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இளைஞர் சக்தி என்ற கருப்பொருள் இவ்வாண்டு சுதந்திரத் தின விழாவில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. சர்வதேச அறிவியல் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், இளம் தொழில்முனைவோர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5,000 சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டை மைதானத்தில் 2,500 தேசிய மாணவர் படை வீரர்கள், மை பாரத் தன்னார்வலர்கள் வந்தே மாதரம் வடிவத்தில் அணிவகுக்கவுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297232®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297347)
வருகையாளர் எண்ணிக்கை : 93
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
Telugu
,
Manipuri
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Kannada
,
Malayalam