மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்கும் சிறப்பு இயக்கம்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 2:36PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டாய ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
2025 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு இயக்கத்தின் கீழ் இதுவரை, 1.56 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகளுடன் ஒருங்கிணைந்து பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவின்போது கைரேகை, கருவிழி ஆகிய தரவுகள் பதிவுசெய்யப்படுவதில்லை. குழந்தைகள் 5 வயதை நிறைவுசெய்யும்போதும், 15 வயதை எட்டியபோதும் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஆதார் அங்கீகார நடைமுறைகளை எளிதாக மேற்கொள்ள வகை செய்கிறது.
குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில், 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவுகளை 2025 அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு கட்டணமின்றி மேற்கொள்ள
வகை செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 7 வயது, 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு 2026 செப்டம்பர் 30 வரை பயோமெட்ரிக் தரவுகளை கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம்.
பயோமெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதார் அங்கீகார நடைமுறைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெற்றோர், அல்லது பாதுகாவலர்கள் தங்களது குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை உரிய காலத்தில் புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300805®=3&lang=1
----
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2300966)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Bengali
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada