சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அசாமைச் சேர்ந்த ஊடகக் குழுவினர் சென்னையிலுள்ள சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-ஐ பார்வையிட்டனர்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 7:30PM by PIB Chennai

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 11 ஊடகவியலாளர்களைக் கொண்ட ஊடகக் குழுவினர்கவுகாத்தி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 19 அன்று சென்னை சிஎஸ்ஐஆர் கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில்மத்திய அரசின் வளர்ச்சித் தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரப்புதல் திட்டத்தின் கீழ், பத்திரிகை தகவல் அலுவலகத்தால் இந்த ஊடகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி மைய இயக்குநர் டாக்டர் என் ஆனந்தவல்லிஇக்குழுவினருக்கு மையத்தின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள்தொழில்நுட்பத் திறன்கள்கட்டமைப்புப் பொறியியலுக்கான பங்களிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அசாம்வடகிழக்குப் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள்வெள்ளம்நிலச்சரிவுகள்பிற இயற்கை இடர்பாடுகளுக்கு உள்ளாகக் கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டுகட்டமைப்புப் பாதுகாப்புமீள்தன்மைநிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-ன் ஆராய்ச்சிதொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாகமேம்பட்ட நிலநடுக்க சோதனை, ஆராய்ச்சி ஆய்வகம்காற்றுப் பொறியியல் ஆய்வகம் உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி வசதிகளைக் குழுவினர் பார்வையிட்டனர். நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டமைப்புகள்கட்டமைப்புகளில் காற்றின் தாக்கங்கள்கட்டமைப்புச் செயல்பாடு உள்ளிட்ட இந்த வசதிகளின் திறன்கள்பயன்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள்தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்கள். மேலும்மையத்தின் பிற முக்கியமான ஆராய்ச்சி வசதிகளையும் பார்வையிட்ட இக்குழுவினர்தொடர்புடைய தொழில்நுட்பங்களின் செயல் விளக்கங்களைக் பார்வையிட்டனர்.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதிலும்புதுமையானபாதுகாப்பானமீள்தன்மை கொண்டநிலையான கட்டமைப்புத் தீர்வுகளை உருவாக்குவதிலும் சிஎஸ்ஐஆர் -எஸ்இஆர்சி-ன் பங்களிப்புக் குறித்து ஊடகப் பிரதிநிதிகள் தெரிந்துகொள்ள இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

***

SS/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2301326) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English