சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்பாடு, பலன் பகிர்வு நிதியிலிருந்து ரூ 2.82 கோடியை, தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்துள்ளது

प्रविष्टि तिथि: 22 AUG 2026 12:49PM by PIB Chennai

உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்பாடு, பலன் பகிர்வு நிதியிலிருந்து ரூ 2.82 கோடியை, தேசிய பல்லுயிர் ஆணையம் விடுவித்துள்ளது. இந்தத் தொகை 27 மாநில பல்லுயிர் வாரியங்கள், 3 யூனியன் பிரதேச பல்லுயிர் மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கர்நாடகாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ 2.01 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

காலிஃபிளவர் வகையின் 8 வீரிய ரகங்கள், அதிக காரத் தன்மை கொண்ட மிளகாய் வகையின் 5 வீரிய ரகங்கள், வெண்டைக்காய் வகையின் 5 வீரிய ரகங்கள், தக்காளி வகையின் 6 வீரிய ரகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய மரபணு சார்ந்த வளங்களைப் பயன்படுத்தியதற்காக, அட்வான்டா என்டர்பிரைசஸ் (முன்பு யுபிஎல் என்று அழைக்கப்பட்டது) நிறுவனத்திடமிருந்து தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ 2.94 கோடி நிதியைப் பெற்றுள்ளது.

இந்த நிதி உயிரியல் வளங்கள் மற்றொரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் பெறப்பட்டன. எனவே, குறிப்பிட்ட விவசாயிகள், சமூகங்கள் அல்லது அடையாளம் காணக்கூடிய ஒரு குறிப்பிட்ட புவியியல் ஆதாரம் போன்ற பலன் கோரி விண்ணப்பித்துள்ளவர்களை  துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.

இத்தகைய சூழல்களில் பலன் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்துவதற்கோ அல்லது பகிர்ந்து கொள்வதற்கோ பொருத்தமான வழிமுறையைப் பரிந்துரைக்க தேசிய பல்லுயிர் ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரை, பின்னர் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையின்படி, தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ 2.80 கோடி தொகையை விடுவித்தது. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், சம்பந்தப்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்த நிதியைப் பெறும் முக்கிய மாநிலங்களாக உள்ளன. பங்குத் தொகையாக   தமிழகத்திற்கு ரூ 10.49 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302262&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302362) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , English , Gujarati , Urdu , हिन्दी