மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டைக் கட்டமைப்பதற்கான பணிகள் அரசு மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

प्रविष्टि तिथि: 22 AUG 2026 4:39PM by PIB Chennai

மகேஸ்வரி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதன் மூலம், மக்களுக்கான சேவையில் தங்களின் நீண்டகாலப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த மகேஸ்வரி சமாஜ் அமைப்பிற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வாழ்த்துத் தெரிவித்தார்.

இம்மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய அவர், மகேஸ்வரி சமாஜ் அமைப்பு சேவை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் சிறப்பான உத்வேகம் அளிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும், அப்பாரம்பரியம் பல்வேறு தலைமுறையினருக்கு ஊக்கமளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் இவ்வமைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்த திரு ஓம் பிர்லா, இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக இருந்த 1926-ம் ஆண்டிலேயே, கல்வியே ஓர் அறிவார்ந்த, பண்பட்ட மற்றும் முன்னேறிய சமூகத்தின் அடித்தளம் என்பதை இவ்வமைப்பின் தொலைநோக்குப் பார்வை உணர்த்தியதாகச் சுட்டிக்காட்டினார்.

வளங்கள் குறைவாகவும், சவால்கள் மிகப்பெரியதாகவும் இருந்த காலகட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்காகத் தங்களது வசதிகளையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து, குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புடன் அவர்கள் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் மகேஸ்வரி சமாஜ் அமைப்பு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்ட மக்களவைத் தலைவர், சவாலான சூழல்களிலும் பொதுச் சேவையில் இச்சமூகம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டதுடன், கல்வி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் பள்ளிகளையும், பயணிகளுக்குத் தங்குமிடம் அளிக்கும் தர்மசாலைகளையும் அமைத்ததாகப் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302340&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302388) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati