சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் நினைவு விநாடி- வினா போட்டியின் 34-வது பதிப்பு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2026 8:37PM by PIB Chennai

கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையமும், இந்திய உலோகவியல் நிறுவனத்தின் கல்பாக்கக் கிளையும் இணைந்து, 2026 செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் அனுபுரத்தில் உள்ள  அணுசக்தித் துறையின் கருத்தரங்கு மையத்தில், பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் நினைவு விநாடி- வினா போட்டியின்  34-வது பதிப்பை நடத்தின.  1990-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டி, இந்திய அணுசக்தி, விண்வெளி மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற உலோகவியல் அறிஞர் பேராசிரியர் பிரம்ம பிரகாஷ்-ன் நினைவாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1993-ல் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது.

   

34-வது பதிப்பில் இந்தியா முழுவதிலுமிருந்து 86 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடங்கிய 43 மாணவர் குழுக்கள் பங்கேற்றன. இந்நிகழ்வை உலோகவியல் மற்றும் பொருட்கள் பிரிவு மற்றும் பொருள் அறிவியல் பிரிவின் இயக்குநரும், நினைவு விநாடி- வினாவின் தலைவருமான டாக்டர் அனீஷ் குமார் தொடங்கி வைத்தார்செப்டம்பர் 19 அன்று, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றினார். அணு எரிபொருள் வளாகத்தின் தலைமை நிர்வாகியும், இந்திய உலோகவியல் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் கோமல் கபூர், வரலாற்றுச் சிறப்புமிக்க 'பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் நினைவுச் சொற்பொழிவை' நிகழ்த்தினார்.

   

இதைத் தொடர்ந்து, பிரபல விநாடி-வினா நிகழ்ச்சி நடத்துநரும் தொலைக்காட்சி ஆளுமையுமான டாக்டர் சுமந்த் சி. ராமன் தலைமையில் நடைபெற்ற பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் நினைவு விநாடி- வினா போட்டி 2026-ன் இறுதிப் போட்டியில் சச்சின், ஜெயஸ்ரீ ஆகியோர் முதலிடத்தையும், அஹானா கோஸ்வாமி, ஆரிஃபா ஃபாத்திமா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பேச்சுப் போட்டியில் ஸ்ரீமன் மிஸ்ரா வெற்றி பெற்றார், அர்னப் கோஷ், ஆஷிஷ் குமார் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை வென்றனர்.

***

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312581) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: English