சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது, சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையரகம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 7:24PM by PIB Chennai
மதுராந்தகம் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பணப் பரிமாற்ற முயற்சிகளைத் தடுப்பதற்காகக் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளுமாறு மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகளுக்கான மத்திய வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையர் அலுவலகம், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு வலுவான கண்காணிப்பு வலையமைப்பை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தேர்தல் நடைமுறைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய அங்கீகரிக்கப்படாத பொருட்கள், மதிப்புமிக்க பொருட்கள், சட்டவிரோத விநியோகங்களைத் தடுப்பதற்காக, இக்குழுக்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்களின் தடையற்ற பங்கேற்பையும் விரைவான நடவடிக்கையையும் உறுதிசெய்யும் வகையில், சென்னை புறநகர் ஆணையரகத்தின் கீழ் உள்ள எம்.எம். நகர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது, தேர்தல் நடைமுறை முடிவுக்கு வரும் வரை 24 மணி நேரமும் செயல்படும்.
சட்டவிரோதப் பொருட்கள், வணிகப் பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகம் குறித்த தகவல்களை, பொது மக்கள் 9962874370 மற்றும் 9865686234 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.prabhupg.g061401[at]gov[dot]in மற்றும் venkatesank.g068901[at]gov[dot]in ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317888®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2318005)
வருகையாளர் எண்ணிக்கை : 53