பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குப் பிரதமர் மலர் அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2026 1:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கும், விஜய்காட்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவர்களின் எளிமை, துணிவு, தேச சேவை நிறைந்த வாழ்க்கை ஆகியவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அவர்களின் லட்சியங்களும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் என்றென்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கும், விஜய்காட்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் அஞ்சலி செலுத்தினேன்.
அவர்களின் எளிமை, துணிவு, தேச சேவை நிறைந்த வாழ்க்கை ஆகியவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
அவர்களின் லட்சியங்களும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும்."
(Release ID : 2318115)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2318216)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam