சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய தென்னை விருதுகள் 2026 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2026 5:00PM by PIB Chennai
இந்தியாவில் 2026 நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள 62-வது சர்வதேச தென்னை மாநாட்டின்போது வழங்கப்படவுள்ள தேசிய தென்னை விருதுகள் 2026-க்கான விண்ணப்பங்களை தென்னை வளர்ச்சி வாரியம் வரவேற்கின்றது.
தென்னை விவசாயத் துறையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களை அங்கீகரிக்கும் வகையில், பின்வரும் மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன:
1. சிறந்த தேசிய தென்னை விவசாயி
2. சிறந்த தென்னை விஞ்ஞானி / ஆராய்ச்சியாளர்
3. சிறந்த தென்னை தொழில்முனைவோர்
நிர்ணயிக்கப்பட்ட தகுதி, நிபந்தனைகளின்படி, தேவையான சான்றுகளுடன் தகுதியுடைய விவசாயிகள், விஞ்ஞானிகள்/ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களுக்குரிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் இணையவழி மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15 அக்டோபர் 2026 ஆகும். விரிவான வழிகாட்டுதல்கள், தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன.
https://coconutboard.gov.in/docs/news/award26/award26.htm
இந்த விருதுகள், தென்னை சாகுபடி, ஆராய்ச்சி, புதுமை, மதிப்புக் கூட்டல், பதப்படுத்தல் மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்கும், தென்னைத்துறையில் முன்னுதாரணமான சாதனைகளை பாராட்டுவதற்கும் வழங்கப்படுகின்றன.
எனவே, தகுதியுள்ள விவசாயிகள், விஞ்ஞானிகள்/ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 15 அக்டோபர் 2026க்கு முன் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
***
AD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318665)
வருகையாளர் எண்ணிக்கை : 39