சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை பூங்கா தலைமை அஞ்சல் அலுவலகம், அண்ணாநகர் அஞ்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் அஞ்சல் பதிவு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 3:13PM by PIB Chennai
பொதுமக்களின் வசதிக்காக சென்னை பூங்கா தலைமை அஞ்சல் அலுவலகம், அண்ணாநகர் அஞ்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் அஞ்சல் பதிவு சேவை அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட நேரத்தில் உள்நாடு, சர்வதேச விரைவு அஞ்சல், பார்சல் சேவைகள் அளிக்கப்படும். பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் இந்த கூடுதல் நேர சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319110)
வருகையாளர் எண்ணிக்கை : 27