சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை நகர மத்திய கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 3:05PM by PIB Chennai

அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னை நகர கோட்ட அலுவலகத்தில் 2026 அக்டோபர் 12 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை மூத்தக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்திய கோட்டம், சென்னை 600017 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில், கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் தலைவர் நேரடியாக பங்கேற்று, அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் குறித்த  வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட குறைகளை கேட்டறிய உள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை, அஞ்சல் அலுவலக மூத்த கண்காணிப்பாளர், சென்னை நகர மத்திய கோட்டம் என்ற முகவரிக்கு 09.10.2026-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

புகார் என்பது தபாலில் அனுப்பப்பட்டப் பொருளைப் பற்றியது என்றால், அந்தப் புகார் அஞ்சலிடப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர்/ பெறுநர் குறித்த முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் உள்ளிட்ட முழு விவரங்களையும், கொண்டிருக்க வேண்டும்.

சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களாக இருந்தால் கணக்கு அல்லது பாலிசி எண், பெயர், மற்றும் டெபாசிட்/காப்பீடு  செய்தவரின் முழு முகவரி, அஞ்சலகத்தின் பெயர், தபால் துறைக்கு அனுப்பப்பட்ட தகவல் குறித்த விவரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து அதற்குத் தீர்வுகாணப்படாத நிலையில், இந்தக் குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம். புதிய குறைகள் குறித்து இம்முகாமில் விசாரிக்கப்படாது.

அஞ்சல் உறையின்  மேல்  கோட்ட அளவிலான அஞ்சலக குறைதீர்ப்பு முகாம், சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

புகார்களை சாதாரண அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். தனியார் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அஞ்சல் உறையின் மேல் கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் என்ற குறிப்பிட வேண்டும்.

***

TV/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2319170) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English