சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொழில்நுட்பக் கலைச்சொற்கள் மேம்பாடு குறித்த தேசிய அளவிலான நிபுணர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 3:49PM by PIB Chennai
சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்–கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி), மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் ஆணையத்தால் (சிஎஸ்டிடி) ஏற்பாடு செய்யப்பட்ட, நான்கு நாள் தேசிய அளவிலான நிபுணர் ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டத்தை 2026 அக்டோபர் 5 முதல் 8 வரை நடத்துகிறது.

இக்கூட்டத்திற்கு புதுதில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் ஆணையத்தின் உதவி இயக்குநருமான திரு தீபக் குமார் முன்னிலை வகித்தார். சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-யின் இயக்குநரும், சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என். ஆனந்தவல்லி தொடங்கி வைத்தார். சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி-யின் ஆலோசகர் (மேலாண்மை) டாக்டர் எஸ். பாரிவள்ளல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மும்மொழி அடிப்படை கலைச்சொற்களை மதிப்பாய்வு செய்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் இந்த நிபுணர் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. தொழில்நுட்பச் சொற்களைத் தரப்படுத்துவதையும், அவற்றை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிபுணர்களுக்கு மிகவும் துல்லியமாகவும், சீராகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
TV/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2319235)
வருகையாளர் எண்ணிக்கை : 25