பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ மத்திய அமைச்சகங்கள், துறைகள் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 6:58PM by PIB Chennai

மத்திய நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு, மத்திய அரசால் தொடங்கப்பட்ட தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0 உத்வேகம் பெற்றுள்ளது.

இந்த இயக்கத்திற்கான தொடக்க நடவடிக்கைகள் (2026 செப்டம்பர் 16-30) செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்த நிலையில், அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2026 அக்டோபர் 2 அன்று தொடங்கியது.

நாடு முழுவதும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், ஊழியர்களின் பரவலான பங்கேற்பை உறுதி செய்யவும், சிறப்பு இயக்கம் 6.0-ல், ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து இணை/துணை அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், களப்பணிக் பிரிவுகளை உள்ளடக்கி, இயக்கத்தின் ஒரு தினத்தை, தூய்மைப் பணிகள், குறைதீர்ப்பு நடவடிக்கைகள், பணியிடங்களை மேம்படுத்துதல், திறம்பட நிர்வகித்தல், மரக்கன்று நடுதல் போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319335&reg=3&lang=1

***

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319467) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी