நித்தி ஆயோக்
5-வது கௌடில்யா பொருளாதார மாநாட்டில், நிதி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2026 8:43PM by PIB Chennai
5-வது கௌடில்யா பொருளாதார மாநாட்டில், “மாற்றங்கள் நிறைந்த காலகட்டத்தில் ஒழுங்குமுறை மேற்பார்வை” என்ற தலைப்பிலான அமர்வில் நிதி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா உரையாற்றினார். வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளும் பரிணமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பாதைகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் தடங்கல்கள், அத்துடன் கட்டணங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், முதலீட்டுத் தடைகள் ஆகியவற்றை உத்திகளாகப் பயன்படுத்தும் போக்கு ஆகியவை, பொருளாதாரச் சூழலை மாற்றியமைத்து வருவதாக திரு கௌபா குறிப்பிட்டார். அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில், பல நிறுவனங்கள், ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும் வேகத்தை விட தொழில்நுட்ப மாற்றங்கள் மிக வேகமாக முன்னேறி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318770®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319574)
வருகையாளர் எண்ணிக்கை : 18