பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
இந்தியாவில் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு என்பது, இந்தியப் பாரம்பரியம், பொறுப்பாளர் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது - இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர், திரு கியானேஷ்வர் குமார் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 7:28PM by PIB Chennai
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம், தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்ததினமான அக்டோபர் 2 அன்று பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு தினத்தை அண்மையில் கொண்டாடியது.
இந்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் 11-வது தொகுதியில் பங்கேற்பாளர்களிடையே சிறப்புரையாற்றிய, அதன் தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கியானேஷ்வர் குமார் சிங், இந்தியாவில் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு என்பது இந்தியப் பாரம்பரியம், பொறுப்பாளர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
2013-ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டப் பிரிவு 166(2)-ஐக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு நிறுவனம் சமூகத்திற்குள் இயங்குவதாகவும், அது பங்குதாரர்களுக்கு மட்டுமின்றி, ஊழியர்கள், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கும் பொறுப்புடையது என்பதை இந்தச் சட்டம் அங்கீகரிப்பதாகக் கூறினார்.
இந்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் வணிக மேலாண்மைக்கு கல்வி நிறுவனத்தின் மூலம், காணொளி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு குறித்த 3-வது தேசிய மாநாடு மற்றும் கண்காட்சிக்கான முன்னோடி நிகழ்வாகவும் அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319348®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2319617)
வருகையாளர் எண்ணிக்கை : 19