ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'சிறப்பு இயக்கம் 6.0'-ன் கீழ் காந்தி ஜெயந்தியன்று ஜவுளி அமைச்சகம் சார்பாக தூய்மைப் பணிகள் நடைபெற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 8:13PM by PIB Chennai

தூய்மை, சுகாதாரம், பொறுப்பான பணிச்சூழல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 2026 அக்டோபர் 2 அன்று ஜவுளி அமைச்சகம் 'சிறப்பு இயக்கம் 6.0'-ன்  கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.

தில்லியில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தில் (நிஃப்ட்)  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜவுளித்துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி நிஃப்ட் நிறுவனத்தின் பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். விழாவில் 'தூய்மை உறுதிமொழி' ஏற்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி முதல், பல்வேறு இடங்களில் துணிக் கழிவுகளைச் சேகரிப்பதற்கென பிரத்யேகத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூய்மை, பொறுப்பான கழிவு மேலாண்மை, நிலையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், தூய்மையான மற்றும் நிலையான இந்தியாவை நோக்கிய மக்களின்  பங்களிப்பையும், கூட்டுச் செயல்பாட்டு உணர்வையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2026 அக்டோபர் 2 முதல் 4 வரை, கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய சணல் வாரியத்திலும், புதுதில்லியில் உள்ள அதன் மண்டல அலுவலகத்திலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319367&reg=3&lang=1

***

TV/BK/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319637) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी